×

துவரம் பருப்பு ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை, ஏப். 9: விழுப்புரத்தில் இருந்து 130 மூட்டை துவரம் பருப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த பால்ராஜ் மகன் மீனாராஜ்(39) என்பவர் ஓட்டினார். லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செரத்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, லாரியின் பின்பக்க டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் துவரம் பருப்பு மூட்டைகள் அனைத்தும் ரோட்டில் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் காவல்நிலைய போலீசார் விபத்துக்குள்ளான லாரியையும், துவரம் பருப்பு மூட்டைகளையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீனாராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். திருநாவலூர் காவல்நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post துவரம் பருப்பு ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Villupuram ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை