×

மும்பையில் பல கோடி மோசடி சென்னை தொழிலதிபர் விமான நிலையத்தில் கைது

சென்னை: மும்பையில் பல கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த சென்னை தொழிலதிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மனோஜ்குமார் (45), தொழிலதிபர். மும்பையை சேர்ந்த சிலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வந்தனர்.இதை அறிந்த மனோஜ்குமார் தலைமறைவானார்.  

நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து பாத்தியாக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் மனோஜ்குமார் வந்தார். அவரது ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவரை சுற்றிவளைத்து பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பிறகு மும்பை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED எல்எல்ஆர் வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம்...