×

தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை

ஏழாயிரம்பண்ணை, நவ.23: வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சார்பில் பருவ மழையால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து பொதுமக்களை எப்படி மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வெம்பகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கண்மாய் மற்றும் ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெம்பக்கோட்டை அணையில் செயல் விளக்க ஒத்திகை அளிக்கப்பட்டது.

அதில் தண்ணீரில் யாராவது தவறி விழுந்தால் அவர்களை மீட்பது குறித்தும், பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு அனுப்புவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

The post தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : awareness ,Ejayarampannai ,Vembakotta fire department ,Vembakot Fire and Rescue Service Station ,Fire Station ,Officer ,Senthurpandian ,Department ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பட்டிமன்றம்