×

முதல்வரை கடவுள் போல சித்தரித்து விளம்பரம்: கடும் விமர்சனத்துக்கு ஆளானதால் ஒளிபரப்பு நிறுத்தம்!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடவுள் போல சித்தரிக்கும் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்காக தியேட்டர்களில் அரசு சார்பில் விளம்பரம் செய்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் அண்மையில் தமிழக அரசு சார்பில் தியேட்டர்களில் ஒரு விளம்பரம் வெளியடப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமி என கூறி அர்ச்சனை செய்ய சொல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த விளம்பரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எனவே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையில் வழக்கம்போல அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லம் முன்பு இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட அரசு விளம்பரத்தில் முதலமைச்சரரை கடவுளாக காட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த விளம்பரம் குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசியதை தொடர்ந்து அவர் அந்த விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டுள்ளதால் இனிமேல் தியேட்டர்களில் ஒளிபரப்படாது என கூறியுள்ளார்.

Tags :
× RELATED ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை...