×

திருமூர்த்தி அணையில் விளக்குகள் பழுது

 

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் திருமூர்த்தி அணை உள்ளது. அணையை ஒட்டிய சாலை வழியாக அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கும் மற்றும் கிராமங்களுக்கும் செல்கின்றனர். அணையின் ஒரு பகுதியில் போகஸ் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கு வெளிச்சத்தில் கிராம மக்கள் சென்று வந்தனர்.

இந்நிலையில், இந்த போகஸ் விளக்கு பழுதாகி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, திருமூர்த்தி அணையில் பழுதடைந்த விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமூர்த்தி அணையில் விளக்குகள் பழுது appeared first on Dinakaran.

Tags : Thirumoorthy Dam ,Udumalai ,Thirumoorthy Hill ,Amanalingeswarar temple ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...