×

திருமயம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

திருமயம்,செப்.24: திருமயம் அருகே நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி வழிகாட்டுதலின்படி திருமயம் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கடந்த சில வாரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் நெய்கோணம், கண்ணனூர், சேதுராப்பட்டி ஆகிய ஊராட்சி திமுக சார்பில் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் திமுகவின் சாதனைகளை திமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி துரைராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் செம்பையா, முல்லை ரமேஷ், கண்ணனூர் ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், சேதுராபட்டி ஊராட்சி மணிமுத்து, காசி, பாலசுப்பிரமணியன், சத்தியராஜ், தங்கராசு உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருமயம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thirumayam ,Tirumayam ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Pudukottai South District ,Law Minister ,Raghupathi ,Tirumayam South Union ,
× RELATED திருமயம், அரிமளம் வார சந்தையில் தக்காளி விலை குறைவு