கிருஷ்ணகிரி, ஏப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மஞ்சலகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி நித்யா(20). இவர் கடந்த 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து நித்யாயின் அண்ணன் சைலேஷ், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், அத்திப்பள்ளியை சேர்ந்த சுதீப் என்பவர் ஆசைவார்த்தை கூறி, தனது தங்கையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமணமான பெண் கடத்தல் appeared first on Dinakaran.
