- திருப்பூரு கந்தசாமி கோயில்
- திருப்பூருர்
- உதவி ஆணையாளர்
- இந்து மதம்
- மத அறக்கட்டளைத் துறை
- ராஜலட்சுமி
- தின மலர்
திருப்போரூர், ஜூன் 19: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.56.82 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்களால் 56 லட்சத்து 82 ஆயிரத்து 658 ரூபாய் ரொக்கமும், 183 கிராம் தங்கமும், 3154 கிராம் வெள்ளியும் ஆகியவை போடப்பட்டு இருந்தது. இந்த பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
The post திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.56.82 லட்சம் appeared first on Dinakaran.
