- திருப்பூர்
- திமுகா
- கோய் மண்டல அதிரடி வீரர்கள்
- மதுக கோய் மண்டல அதிரடி வீரர்கள் கூட்டம்
- வாலிபாளையம், கன்னிபிரான் காலனி
- அர்ஜுநாராஜ்
- மாநகர
- மாவட்டம்
- ஆர். நாகராஜ்
- கோவா
- ஈரோடு
- சேலம்
- நாமக்கல்
- நீலகிரி
- மதுக கோய் மண்டல அதிரடி வீரர்கள் கூட்டம்
திருப்பூர், ஜூலை1: மதிமுக கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் வாலிபாளையம், கன்னிபிரான் காலனியில் இன்று(1ம் தேதி) நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வரவேற்கிறார்.கோவை,ஈரோடு,திருப்பூர்,சேலம், நாமக்கல்,நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடிய செயல் வீரர்கள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன்,முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரக்கூடிய நிலையில் திருப்பூரில் நடைபெறும் மதிமுக கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பூரில் இன்று நடக்கிறது மதிமுக கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
