×

திருட முயன்ற நபர் மீது தாக்குதல் ஒருவர் கைது

 

புதுச்சேரி, நவ.23: விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (40). இவரை புதுச்சேரி கோரிமேடு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்தனர். அப்போது போலீசார் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த மாதம் 14ம் தேதி இரவு, புதுச்சேரி சஞ்சீவ் நகரில் குமார் சைக்கிளை திருட முயன்றபோது, அப்பகுதியை சேர்ந்த முருகன் (42) என்பவர் பார்த்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் முருகன் தாக்கியதில் குமாரின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் முருகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post திருட முயன்ற நபர் மீது தாக்குதல் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kumar ,Vanur ,Villupuram district ,Korimedu ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...