கோவை: கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆறுமுகத்தின் உதவியாளர்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலி பயிற்சியாளர் ஆறுமுகம் தன்னை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினுடைய பயிற்சியாளராக அங்கீகரிக்கப்பட்டவராக கூறிக்கொண்டு பல்வேறு போலி சான்றிதழ்களை தயாரித்து பல்வேறு கல்லூரிகளில் 1450 முகாம்களில் இந்த பேரிடர் பயிற்சியை கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி கொடுத்த போது லோகேஸ்வரி என்ற மாணவியை தள்ளிவிட்டதின் அடிப்படையில் அந்த மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலி பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு ஜூலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டுள்ளார். ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆறுமுகத்துடன் கூட இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் இதற்கு முன்பாக கல்லூரிகளில் பயிற்சி கொடுக்கும் போது அவர்கள் பழகியவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கல்லூரியை முடித்த பின்பு பணியில்லை என்ற அடிப்படையில் ஆறுமுகத்தை சந்தித்துள்ளனர். இதன்பின்பு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி அளிப்பதாக கூறி ஆறுமுகம் தன்வசம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு வேலை போன்ற வேலைகளில் சேரும் போது இந்த ஆணையத்தில் பயிற்சி முடித்திருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அந்த சான்றிதழ்காகவும் அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி தன்வசம் இழுத்துக்கொண்டு தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று முகாம்களுக்கு உதவியாளர்களாக இந்த 5 பேரை வைத்துக்கொண்டு ஆறுமுகம் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
