திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்து 98 கிடைத்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள 10 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்க பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை நேற்று எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் ஆய்வாளர் சுரேஷ்குமார்,நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் முன்னிலை வகித்தனர். கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 10 பொது உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.5 லட்சத்து 65 ஆயிரமும், ஒரு திருப்பணி உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.64 ஆயிரத்து 98ம் கிடைத்தது. இதுதவிர தங்கம் 28.6 கிராம், வெள்ளி 1,238 கிராம் ஆகியவை கிடைத்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வ தொண்டர்கள், கோயில் பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
The post திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.6.29 லட்சம் appeared first on Dinakaran.