×

தாளவாடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்: நீலகிரி எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார்

 

சத்தியமங்கலம், ஜுலை 4: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் வாக்குச்சாவடிதோறும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பி-யுமான ஆ.ராசா கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கை படிவம் எழுதுதல், இதற்கென வடிவமைக்கப்பட்ட செயலியில் பதிவேற்றுதலை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், டிஜிட்டல் முகவர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தாளவாடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்: நீலகிரி எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Oraniyil Thalavadi ,Nilgiris ,MP A. Raja ,Sathyamangalam ,Chief Minister ,M.K. Stalin ,DMK ,Oraniyil Tamil Nadu ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...