×

தற்காலிக பேருந்து நிறுத்தம் காரணமாக புழல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

 

புழல், ஜூன் 25: புழல் ஏரி அருகே தற்காலிக பேருந்து நிறுத்தம் காரணமாக, செங்குன்றம் பேரூராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் காரணமாக செங்குன்றம் பேருந்து நிலையம் தற்காலிகமாக புழல் ஏரி மதகு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்துதான் நேற்று முதல் அனைத்து பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.

தற்காலிக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள புழல் ஏரி மதகு அருகே ஜி.என்.டி சாலை ஓரத்தில் தனியார் கொட்டகை போட்டு ஆக்கிரமிப்பு செய்தது குறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கரன், பொறியாளர் முத்து மற்றும் ஊழியர்கள் அங்கு சென்றனர்.பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கொம்புகளை அகற்றினர். அப்போது யாரும் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, அப்படி செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்குன்றம் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தற்காலிக பேருந்து நிறுத்தம் காரணமாக புழல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Puzhal ,Sengunram Town Panchayat ,Sengunram Arignar Anna Bus Stand ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு