தர்மபுரி, செப்.28: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் அனல்காற்று வீசியபடி காற்றும், வெயிலும் இருந்தது. குறிப்பாக, தர்மபுரியில் வெப்பம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழையினால் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கனமழையால் வெப்பம் தனிந்து பூமி குளிர்ந்தது. மழையின போது தர்மபுரி செங்கல்மேடு பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் பற்றி எறிந்தது.
The post தர்மபுரியில் திடீர் மழை appeared first on Dinakaran.