×

தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம்.!

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்பது செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் அரசினால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் இருக்கிறது, திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளுவதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் திட்டங்களுடைய செயல்பாடுகள், தரவுகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளுவார்கள். மாதத்தில் 4 நாட்கள் இந்த கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்….

The post தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம்.! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...