×

தமிழில் அர்ச்சனை செய்ய சிறப்பு கட்டண சீட்டுக்கள் அறிமுகம்: 60% அர்ச்சகர்களுக்கு பங்கு தொகையாக வழங்க நடவடிக்கை

சென்னை: தமிழில் அர்ச்சனை செய்ய சிறப்பு கட்டண சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வழிபாட்டு கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகர்களுக்கு பங்கு தொகையாக வழங்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழில் வழிபாடு செய்வதற்கான கட்டணச் சீட்டுத் தொகையில் 60 சதவிகிதத்தினை அர்ச்சகர்களுக்கு பங்குத்தொகையாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது. மேலும், அனைத்து கோயில்களிலும் ‘அன்னைத் தமிழில் வழிபாடு செய்யப்படும்’ என்ற பெயர் பலகையினை, கோயில் முகப்பில் பக்தர்கள் அனைவரும் நன்கு அறியும் வகையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அவ்விளம்பரப் பலகையில் தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களின் பெயர் விவரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழில் அர்ச்சனை செய்ய சிறப்பு கட்டண சீட்டுக்கள் அறிமுகம்: 60% அர்ச்சகர்களுக்கு பங்கு தொகையாக வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...