×

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்களை உடனடியாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக தமிழக மாணவர்கள் விரைவாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மீட்பு குழு அமைத்து உக்ரைனிலிருந்து மாணவர்கள், மற்றும் 2,000 தமிழர்களை மீட்டு வந்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும் அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் இருந்தாலும் சரி எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவோம் என முதல்வர் கூறியுள்ளார்….

The post தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamils ,CM Stalin ,Chennai ,Ukraine ,Russia ,Tamil Nadu ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்