×

தமிழகத்தில் 2 கட்ட தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை..! பரிந்துரையும் செய்யப்படவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரையும் செய்யப்படவில்லை. மேலும் திட்டமிட்டபடி வரும் 20-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர். கடந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாகு கூறியதாவது; தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை திட்டவட்டமாக அவர் மறுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்தப் பரிந்துரையும் தேர்தல் ஆணையத்துக்கு செய்யப்படவில்லை எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். மேலும் திட்டமிட்டபடி இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவே நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது….

The post தமிழகத்தில் 2 கட்ட தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை..! பரிந்துரையும் செய்யப்படவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer ,Sathyapratha Sahu ,Electoral Officer ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...