×

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; தற்போது சிகிச்சையில் 3,131 பேர் மட்டுமே உள்ளனர்: சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,50,817 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 51,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,46,60,933 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 34,09,674 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 3,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 38,012 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் 10-க்கும் குறைவான அளவே தொற்று உறுதியாகியுள்ளது. 7 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட தொற்று உறுதியாகவில்லை. இன்று கோவையில் மட்டும் ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். …

The post தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; தற்போது சிகிச்சையில் 3,131 பேர் மட்டுமே உள்ளனர்: சுகாதாரத்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health ,Chennai ,Malaysia ,Health department ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு – கேரள...