×

தனியார் ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

 

ஸ்ரீபெரும்புதூர், மே 28: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆலையில் 40 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட்டில் ஜே.பி.எம்., ஆட்டோ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தொழிற்சாலையில் சிஐடியூ தொழிற்சங்கம் தொடங்கிய தொழிலாளர்கள் 40 பேரை, பல்வேறு காரணங்களை காட்டி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இந்த, விவகாரத்தில் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டு ஓராண்டை கடந்தும், நிர்வாகம் மீண்டும் 40 தொழிலாளர்களுக்கு பணி வழங்கவில்லை. இதனை கண்டித்து ஜே.பி.எம்., ஆட்டோ தொழிற்சாலைக்கு எதிராக தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஒரகடம் மேம்பாலம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post தனியார் ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,JPM Auto Factory ,Oragadam Chipkot ,Sriperumbudur, Kanchipuram district ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...