×
Saravana Stores

தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்தது. தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு 550 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. எனவே தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

The post தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...