×

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

 

பெரம்பலூர்,மே.10: பெரம்பலூர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்  தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்  தட்சிணாமூர்த்திக்கு காலை 10:30 மணி முதல் 11:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்படி பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன்.சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜா, மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர். பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

The post தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Dakshinamoorthy ,Perambalur Shiva Temple ,Akilandeswari Sametha Brahmapureeswarar Temple ,Thuraiyur Road ,Perambalur Municipality ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...