×

தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை சம்பா பயிர் பாசன தேவை பூர்த்தியாகும்

தஞ்சாவூர்,நவ.30: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. சம்பா பயிர்களின் பாசன தேவைக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் கொளுத்திய நிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி திருவையாறு , பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, சாலியமங்கலம், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது.

நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக ஈசன் விடுதியில் 22 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஒரத்தநாட்டில் 9, நெய்வாசல் தென்பதியில் 3.20, வெட்டிக்காட்டில் 2.40, அய்யம்பேட்டையில் 2, மஞ்சளாரில் 3.40, கீழ் அணைக்கரையில் 4.40, அதிராம்பட்டினத்தில் 5.30, பேராவூரணியில் 1.40 என மொத்தமாக 53.10 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 2.53 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என தஞ்சை மாவட்ட பேரிடர் மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையில் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரவலாக பெய்த இந்த மழை சம்பா பயிர்களின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை சம்பா பயிர் பாசன தேவை பூர்த்தியாகும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Dinakaran ,
× RELATED பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரம்