×

தஞ்சாவூர் கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கும்பகோணம், ஆக. 31: கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து காவல்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் அரசு மகளிர் கலை கல்லூரி, கும்பகோணம் ரோட்டரி சங்கம், கோ நகர் நாடு நர்சிங் கல்லூரி ஆகியன இணைந்து இப்பேரணியை நடத்தின. ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். உதவி ஆளுநர்கள் வெள்ளைச்சாமி, சங்கரன், உதயகுமார் மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாமக குளம் அருகில் தொடங்கிய இப்பேரணியை எம்எல்ஏ அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி, கோட்டாட்சியர் பூர்ணிமா ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். முக்கிய வீதிகளில் வழியாக சென்ற பேரணி காந்தி பூங்கா அருகே உள்ள போர்ட்டர் டவுன் ஹாலில் நிறைவடைந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதில், கும்பகோணம் ஊராட்சி தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், அரசு கலைக்கல்லூரி முதல்வர் மாதவி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : safety awareness ,Thanjavur Kumbakonam ,Kumbakonam ,Tamil Nadu Government Traffic Police ,Tamil Nadu Government… ,Thanjavur Kumbakonam road safety awareness rally ,Dinakaran ,
× RELATED புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்