×

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: 2000 பேருக்கு பணி ஆணை

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், திருவள்ளூர் எம்பி  ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, பொன்னேரி துரை சந்திரசேகர், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் காரப்பாக்கம் கணபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை இயக்குனர் வீரராகவராவ் ஐஏஎஸ் ஆகியோர் முகாமை துவக்கிவைத்தனர். முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 245 தொழிற்சாலைகள் சார்பில் 3000 பணியிடங்களுக்கு ஆட்களை நேர்காணல் செய்தனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பிற்கென தனி அரங்கில் நேர்காணல் நடத்தப்பட்டது. வேலைக்காக 2000 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கினர். நிகழ்வில் 20 மாற்றுத் திறனாளிகளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஷ்வரி, ஒன்றிய  செயலாளர்கள் மு.மணிபாலன், ஜெ. மூர்த்தி கி.வே.ஆனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: 2000 பேருக்கு பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : TD ,J.J. Private Job Opportunity ,S Engineering College ,Chennai ,Gummipipoondi ,Baural ,D. J.J. ,Mega Jobs Camp ,Engineering College ,S.S. ,Gummitypoondi ,MLA ,T. J.J. Govindarajan ,D. J.J. Private Jobs Camp ,US Engineering College ,
× RELATED மேற்குவங்க புதிய டிஜிபி 24 மணி...