×

டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 3வது ஆய்வக தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா..!!

ஹைனான்: டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 3ம் மற்றும் கடைசி ஆய்வக தொகுதியை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக ஒரு விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க தேவையான ஆய்வக தொகுதிகளை 3 பிரிவுகளாக பிரித்து சீனா அனுப்புகிறது. ஏற்கனவே 2 ஆய்வக தொகுதிகள் அனுப்பப்பட்ட நிலையில், 3வது ஆய்வக தொகுதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஹைனான் மாகாணத்தில் உள்ள வெண்சாங் விண்தள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5பி ஒய்3 ராக்கெட்டை பயன்படுத்தி 20 மெட்ரிக் டன் எடையுள்ள மெங்டியன் தொகுதியை விண்ணில் ஏவியது. மெங்டியன் ஆய்வக தொகுதி விண்வெளி ஆய்வகத்தின் முக்கிய கோர் தொகுதியுடன் இணைக்கப்படும். வெண்டியனில் உள்ள ஏர்லாக் கேபின் விண்வெளி வீரர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெங்டியனின் ஏர்லாக் கேபின் சரக்குகளை தானாக நுழைவதற்கும், வெளியேற்றுவதற்கும் உதவும் என விண்வெளி நிலைய திட்டத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். …

The post டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 3வது ஆய்வக தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா..!! appeared first on Dinakaran.

Tags : China ,Tiangong Space Station ,Hainan ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...