×

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேருக்கு பணிநியமன ஆணை

சென்னை:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் பணிநியமனம் செய்யப்பட்ட 24 பேருக்கு பணிநியமன ஆணையை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் வழங்கினார்.  இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.ஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில்  பணிநியமனம் செய்யப்பட்ட 10 தட்டச்சர்கள், கருணை அடிப்படையில் பணிநியமனம்செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள், 1 இருட்டறை உதவியாளர், 1 சமையலர், 1 மருந்தாளுநர்மற்றும் 4 அலுவலக உதவியாளர் என மொத்தம் 24  நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் (இ.எஸ்.ஐ) டாக்டர் அசோக்குமார், கூடுதல் இயக்குநர் டாக்டர் ஷம்ஷத் பேகம், ஷகிலா, இணை இயக்குநர்  ஈஸ்வரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேருக்கு பணிநியமன ஆணை appeared first on Dinakaran.

Tags :
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...