×

டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப். 22: மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் தரப்பில் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொழிலாளர் துறையில் பணி நிரந்தரம், தகுதி வழங்கல் சட்ட அமலாக்க அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் 22 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மார்க் ஊழியர்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

The post டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : TASMAC ,Madurai ,Joint Action Committee ,Thiruvalluvar ,Madurai Collector ,General Secretary ,Sivakumar ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...