×

ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் மருத்துவர் தின கொண்டாட்டம்

 

திருப்பூர், ஜூலை 4: ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமையில் நடந்த நிகழ்வில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ் முன்னிலை வகித்து வரவேற்றார். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியும் சிறப்பு பல் மருத்துவருமான மருத்துவர் அகிலா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளி தாளாளர் கூறியதாவது:மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் இடைவிடாத முயற்சிகளை அங்கீகரிக்கும் பொருட்டு மருத்துவர் தினத்தை நமது பள்ளியில் கொண்டாடி வருகிறோம். எதிர்காலத்தில் மருத்துவராக வரக்கூடிய நமது மாணவர்கள் அறம் சார்ந்த முறையில் சரியான செலவில் துல்லியமாக மருத்துவப் பணியை மேற்கொண்டு சமூக சேவையை ஊக்குவிக்கும் மனப்பான்மையோடு திகழ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நிறைவாக பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The post ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் மருத்துவர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Doctor's Day ,Jai ,Saradha ,Matriculation ,Higher Secondary ,School ,Tiruppur ,National Doctor's Day ,Jai Saradha Matriculation ,Higher ,Secondary School ,Nikkans Veluchamy ,Sruthi Haris ,Jai Saradha Matriculation Higher Secondary School ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...