- சனி
- ஜெயங்கொண்டம் சிவன் கோயில்கள்
- Jayankondam
- சிவன்
- கழுவமலைநாதர்
- சென்னீஸ்வரர்
- சோழீஸ்வரர்
- கங்கைகொண்டா
- சோழபுரம்
- பிரகதீஸ்வரர்
- ஆண்டிமடம் அகத்தீஸ்வரர்
- உதயர்பாளையம்
- பயாரனீஸ்வரர்
- பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்
- செங்குந்தபுரம்…
- ஷானி பிரதோஷம்
ஜெயங்கொண்டம், மே 25: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது, நந்தியம்பெருமானுக்கு திரவியப்பொடி, மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. சனி பிரதோஷம் என்பதால் இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் ஆகிய கோயில்களில் நேற்று நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.
The post ஜெயங்கொண்டம் சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.
