×

ஜெயங்கொண்டம் கழுமலைநாத சுவாமி கோயில் செயல் அலுவலகம் திறப்பு விழா

 

ஜெயங்கொண்டம், ஜூன் 19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய செயல் அலுவலர் அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் செயல் அலுவலர் அலுவலகத்தை அரியலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் லட்சுமணன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தர் கந்தவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் கழுமலைநாத சுவாமி கோயில் செயல் அலுவலகம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Jayankondam ,Kazhumalainatha ,Swamy Temple ,Executive Office Opening Ceremony ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Jayankondam, ,Udayarpalayam taluk, Ariyalur district ,Jayankondam Executive… ,Jayankondam Kazhumalainatha Swamy Temple Executive Office Opening Ceremony ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...