×

ஜூலை 25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

ஊட்டி, ஜூலை 22: தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் வரும் 25ம் தேதி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெறவுள்ளது.

இம்முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, பட்டய மேற்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, நர்சிங், பார்மஸி, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ போன்ற கல்வி முடித்துள்ள இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவ சான்றுகளுடன் கலந்து கொண்டு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சியினை தேர்வு செய்து பயன்பெறலாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

The post ஜூலை 25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை