×

ஜூலை 2ம் முதல் 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி

 

ஈரோடு, ஜூன் 27: கால் நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் தாக்கத்தை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு 2025-26ம் ஆண்டுக்கான 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வரும் ஜூலை 2ம் தேதி தொடங்கி 31ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 114 குழுக்கள் அமைக்கப்பட்டு, 3 லட்சத்து 5 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவுள்ளது.
இதற்காக 3 லட்சத்து 38 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூலை 2ம் முதல் 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Erode ,Department of Veterinary Care ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...