×

ஜூன் 27ல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம்

 

கோவை, ஜூன் 24: கோவை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் வருகிற 27ம் தேதி (வெள்ளி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

The post ஜூன் 27ல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Corporation Council ,Coimbatore ,Coimbatore Corporation ,Victoria Hall ,Mayor ,Ranganayaki ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...