- ஜார்க்கண்ட்
- பாலக்காடு
- ரவிக்குமார் சிங்
- அட்டப்பாடி ஆடு
- அட்டப்பாடி கண்டியூர்,
- பாலக்காடு மாவட்டம்
- அகழி காவல் துறை
- தின மலர்
பாலக்காடு, மே 8: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி கண்டியூரில் அட்டப்பாடி ஆடு வளர்ப்பு பண்ணையில் ஜார்கண்ட்டை சேர்ந்த ரவிக்குமார் சிங் வேலை பார்த்து வந்தார்.
இவரை அவரது நண்பர் கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அவரை தேடி வந்த நிலையில் பெரும்பாவூரில் அசாமை சேர்ந்த நஜ்ருல் இஸ்லாம் (40) மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிடிபட்டனர். இதனைத்தொடர்ந்து அகழி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நஜ்ருல் இஸ்லாமிடம் போலீசார் விசாரணை செய்தபோது தனது மனைவியை குறித்து அவதூறாக பேசிய ரவிக்குமார் சிங்கை கொடுவாளால் வெட்டி கொலை செய்ததாகவும், மனைவியை அழைத்துக்கொண்டு தப்பி விட்டதாகவும், இந்த கொலைக்கு தனது மனைவிக்கு எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அகழி எஸ்ஐ நிதின் தலைமையில் போலீசார், நஜ்ருல் மீது வழக்கு பதிந்து கைது செய்து, மன்னார்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஜார்கண்ட் வாலிபர் கொலை வழக்கில் சக நண்பர் கைது appeared first on Dinakaran.
