×

ஜான்பாண்டியனை ஆதரித்து ஸ்மிருதி ராணி வாக்குசேகரிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி நேற்று எழும்பூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், ‘மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து செயல்படும் பெ.ஜான்பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் 22 கோடி ஏழை பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிவாரணம் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக 10 கோடி கழிவறைகள் ஏழை குடும்பத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாஜகவால், தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவறை வசதியை பெற்றுள்ளன. சாகர் மாலா திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் கோடியில் 107 திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்திருக்கிறார். ரூ.23 ஆயிரம் கோடியில் 26 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தமிழகத்துக்கு மோடி கொடுத்திருக்கிறார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 1 கோடியே 57 லட்சம் தமிழர்கள் பயன் பெற்றுள்ளனர்.  நல்ல மருத்துவ வசதி, சிறப்பான உள்கட்டமைப்பு, புதிய கல்வி கொள்கை, பெண்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை செயல்படுத்த இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்களித்து, தாமரை மலர செய்ய வேண்டும்,’ என்றார். கூட்டத்தில், ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன், நிவேதிதா பாண்டியன், வியங்கோ பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். …

The post ஜான்பாண்டியனை ஆதரித்து ஸ்மிருதி ராணி வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Smriti Rani ,Janpandian ,Chennai ,Tamil Nadu People's Development Association ,President ,P. Janpandian ,AIADMK ,Egmore ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...