×

சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை 1000 வாழைகள், 100 தென்னைகள் நாசம்-உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 1000 வாழைகள், 100 தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல ஊர்களில் மின்தடையும் ஏற்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி போயின. காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி கட்டிடத்தின் மேல் 100 ஆண்டு பழமையான புளியமரம் சாய்ந்ததால் கட்டிடம் சேதமானது. மன்னாடி மங்கலம், புதுப்பட்டி, தாமோதரன்பட்டியில் சில வீடுகள் இடிந்து விழுந்ததுடன், நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் முறிந்து விழுந்தது. இதே ஊர்களில் பலன் தரும் நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தது. மன்னாடிமங்கலம் ராமு, தொத்தன், ராஜேந்திரன் ஆகியோரின் வெற்றிலை கொடிக்காலும் முழுவதும் சாய்ந்து சேதமானது. இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் கண்ணீருடன் உரிய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.எம்எல்ஏ ஆறுதல்தகவலறிந்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சேதமான விவசாய பகுதிகளையும், இடிந்த வீடுகளையும் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உடனடியாக உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.அப்போது தாசில்தார் பழனிக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் பசும்பொன் மாறன், விவசாய அணி முருகன், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், பவுன் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை 1000 வாழைகள், 100 தென்னைகள் நாசம்-உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholavanthan ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரிக்கை