×

குமரியில் பிரசாரத்தின்போது சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ அனுப்பிவைத்த ராகுல்காந்தி

தக்கலை: குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அவர் முளகுமூடு செல்லும்போது பரைக்கோடு பகுதியில் சிறுவர்கள் சிலர் காமராஜர் படத்தை ஏந்தி நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது காமராஜர் படத்துடன் நின்ற சிறுவனை அழைத்து சென்று பேசினார். அப்போது அந்த சிறுவன் தனது பெயர் ஆன்ட்னி பெலிக்ஸ்(11) எனவும், 6ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளான்.

ராகுல்காந்தி சிறுவனிடம் பேசும்போது உனக்கு எதில் ஆர்வம் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் ‘‘ரன்னிங்’’ என்று கூறியுள்ளான்.  நான் உனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி தரட்டுமா? என்று கேட்டபோது ஆன்டனி பெலிக்ஸ் சரி என்று கூறியுள்ளான்.   ராகுல்காந்தி பிரசார பயணம் முடித்து சென்று நேற்று 9 வது நாளாகியிருந்த நிலையில் அந்த சிறுவனின் முகவரிக்கு கூரியர் நிறுவனத்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் ஷூ பார்சல் வந்துள்ளது. அதனை பெற்றுக்கொண்ட சிறுவன் இது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தான். இது ராகுல்காந்தி அனுப்பி வைத்த ஷூ என்று நண்பர்களிடம் கூறி மகிழ்ந்து வருகிறான்.

Tags : Rahul Gandhi ,Kumari , Rahul Gandhi sends sports shoe to a student he met during the campaign in Kumari
× RELATED அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா...