×

செல்போன் திருடிய ரவுடி கைது

 

ஈரோடு, ஜூன் 26: ஈரோடு பழைய பூந்துரை சாலை ஓடை பள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (28). கடந்த 24ம் தேதி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கருங்கல்பாளையம் மோசி கீரனார் வீதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி இப்ராகிம் (32). கவுதமின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.7000 மதிப்பிலான மொபைல் போனை பறித்து கொண்டு தப்பி தலைமறைவானார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் கவுதம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். இப்ராகிம் மீது 12 வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் பட்டியலில் ஏ பிரிவு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

The post செல்போன் திருடிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Erode ,Gautham ,Odai Pallam ,Old Poondurai Road, Erode ,Moshi Keeranar Street, Karungalpalayam, Erode ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...