×

செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

பண்ருட்டி, ஜூலை 25: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம், பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மருங்கூர் அகழாய்வு பணிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. மருங்கூர் அகழாய்வுப் பணிகள் அகழாய்வு இயக்குநர் முனைவர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளர்கள் பாக்கியலட்சுமி மற்றும் சுபலட்சுமி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருங்கூர் அகழாய்வில் ராசராசன் கால செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரவுலட்டட் வகை பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவ்வகையில், தற்போது கண்களுக்கு மைதீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7 செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளது.

The post செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Anjanaka ,Panrutti ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Geezadi ,Vembakottai ,Thirumalapuram ,Polpanaikottai ,Kilnamandi ,Kongalnagaram ,Sennanur ,Marungur ,Tamil Nadu Government Archeology Department ,
× RELATED மொபட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது