×

சென்னை-கொல்லம் விரைவு ரயில் 28ம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

சிவகாசி, ஜூலை 20: சென்னை எழும்பூரில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக கொல்லத்திற்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு கொரோனா ஊரடங்கிற்கு பின் சிவகாசியில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் போது சிவகாசியில் நின்று சென்றது. சென்னை – கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள், வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை-கொல்லம் ரயில் சோதனை அடிப்படையில் சிவகாசியில் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாக குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் வரும் 27ம் தேதி சென்னையில் புறப்படும் விரைவு ரயில் 28ம் தேதி அதிகாலை 1:52 மணிக்கு சிவகாசியில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகாசி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post சென்னை-கொல்லம் விரைவு ரயில் 28ம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai-Kollam Express ,Sivakasi ,Chennai ,Egmore ,Kollam ,Rajapalayam, Thenkasi.… ,Chennai-Kollam ,Southern ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் 84 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்