×

சென்னையில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்தாண்டுகளில் வருகை தந்தனர். ஊட்டி-குன்னூர் இடையே டீசல் இன்ஜின் மூலமும், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயிலில் இயங்கும் இன்ஜின் மூலமும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் 28 பெட்டிகள் உள்ளன.இந்த நிலையில் நீலகிரி மலை ரயிலுக்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் புதியதாக 28 பெட்டிகள் தயார் செய்யப்பட்டது. இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டத்திற்காக 4 பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும்போது, நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊட்டி மலை ரயிலின் பழைய இன்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டு இந்த பெட்டிகளுடன் நேற்று மலை ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விரைவில் இந்த பெட்டிகள் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த ரயில் பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் இன்றும் (25ம் தேதி) நாளையும் (26ம் தேதி) நடத்தப்பட உள்ளது….

The post சென்னையில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Feedi Mountain Rail ,Chennai ,Gunnur ,Nilgiri District ,Feedi ,Madupalayam ,Feedi Mountain ,Rail ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...