×

செந்துறை அருகே சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்து சாம்பல்

அரியலூர்: செந்துறை அருகே சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. நேற்று மாலை இவரது வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் திடீரென்று வெடித்தது, இதில் குடிசை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தனியார் சிமென்ட் ஆலை தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தளவாய் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செந்துறை அருகே சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Tags : Senturai ,Ariyalur ,Dinakaran ,
× RELATED உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும்...