×

செந்துறையில் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம்

ஜெயங்கொண்டம், ஜூன் 18: அரியலூர் மாவட்டம் செந்துறையில் கடந்த 25 ஆண்டு காலமாக வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது, செந்துறை-உடையார்பாளையம் சாலையில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை முழு கூடுதல் பொறுப்பு, பெரம்பலூர் – அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் வினோத் தலைமையில், செந்துறை நிலைய அலுவலர் பூபதி முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக பொறியாளர்கள், தீயணைப்புநிலைய வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செந்துறையில் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் appeared first on Dinakaran.

Tags : Senthurai ,Jayankondam ,Fire and Rescue Department ,Senthurai, Ariyalur district ,fire and rescue ,Revenue Taluka Office ,Senthurai-Udaiarpalayam road… ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...