×

செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ.17.64 லட்சம் உண்டியல் காணிக்கை

 

பாடாலூர், ஜூன் 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சாமி கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அறநிலைத் துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள் 60 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 3 மாதங்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.17 லட்சத்து 64 ஆயிரத்து 439 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் உண்டியலில் 9 கிராம் தங்கம், 518 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. இந்த தொகை கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

The post செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ.17.64 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Chettikulam Murugan Temple ,Patalur ,Chettikulam, Alathur ,Perambalur district ,Ekambareswarar ,Thandayuthapani ,Thandayuthapani temple ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...