×

செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது

 

செங்கல்பட்டு, ஜூலை 8: செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், செங்கல்பட்டு துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நாகபூவர்சனம் (69), குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த துரை (55), சென்னேரியை சேர்ந்த ரமேஷ் (46) ஆகியோரை கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Superintendent ,Police Sai Praneeth Police Department ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...