×
Saravana Stores

செக் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

 

கிருஷ்ணகிரி, மே 30: ஓசூர் தனியார் நிறுவனத்தில், செக் மோசடி வழக்கில் ஈடுபட்ட 3 பேருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அசோக் லேலாண்ட் கம்பெனிக்குரிய 21 வங்கி காசோலைகளை, தவறாக கையாண்டு, ₹31 லட்சத்து 2 ஆயிரத்து 220 மோசடி செய்ததாக, கடந்த 2003ம் ஆண்டு அந்நிறுவனத்தின் மேலாளர் ரங்கநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகாரளித்தார். அதன்படி, அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள் சிக்கினர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -2ல், 21 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நீதிபதி ஸ்ரீவஸ்தவா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பவர்களில் மகா ருத்ரமூர்த்தி மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் சண்முகம், கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை மற்றும் தலா ₹3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post செக் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri court ,Hosur Private Company ,Krishnagiri district ,Hosur Ashok Leyland Company ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் இருந்து தொலைதூர...