×

சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பயணிகள் படுகாயம்

 

ஏற்காடு, மே 4: ஏற்காடு மலைப்பாதையில் நேற்று மாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பயணிகள் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(29). இவர் டெம்போ ட்ராவலர் ஓட்டி வருகிறார். இவரது வேனில் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 8 பெண்கள், குழந்தைகள், சிறுவர் சிறுமியர் என 28 பேர் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர், நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில், வாழவந்தி கிராமம் ஆத்துப்பாலம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்பு சுவரைத் தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், சூரமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி லாவண்யா, ரித்திக்(9), யாத்ரா(10), அபிராமி(18), கோகிலவாணி(38), கவிதா(12), மணிகண்டன்(20), கமலா(19), சுதா(44) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஏற்காடு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த ஒரு சிலர் மட்டும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆர்டிஓ மணிமாறன், டிஎஸ்பி தையல்நாயகி, ஏற்காடு தாசில்தார் தாமோதரன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காடு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்காடு பிரதான சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது.

The post சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Dinakaran ,
× RELATED மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலி