×

சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் பாசி படர்ந்த மழை நீர்

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் யூனியன் மில் சாலை மற்றும் பூங்கா சாலையை இணைக்கக்கூடிய வகையில் சுரங்க பாலப்பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது‌. சுமார் ஒரு ஆண்டிற்கு மேலாக சுரங்க பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. பார்க் சாலையில் சுரங்கபாலப்பணிகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில், நிறைவு பெற்ற பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த கனமழையின் காரணமாக மழை நீர் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாது சுரங்கப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்துள்ளது.

தொற்று ஏற்படும் பாதிப்பு உள்ளதன் காரணமாக நெடுஞ்சாலை துறையினர் கவனம் செலுத்தி தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி சுரங்க பாலப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் பாசி படர்ந்த மழை நீர் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Highways Department ,Tiruppur Union Mill Road ,Park Road ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...